சீனத் தேசிய மின்னணு வணிகம் பற்றிய பணிக் கூட்டம் பெய்ஜிங்கில் பிப்ரவரி 24, 25ஆம் நாட்களில் நடைபெற்றது. அதில், 2024ஆம் ஆண்டில் மின்னணு வணிகத் துறையில் ஈட்டியுள்ள சாதனைகள் பன்முகங்களிலும் தொகுக்கப்பட்டு 2025ஆம் ஆண்டுக்கான முக்கிய பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டில் சீன நாடளவில் இணையம் மூலமான சில்லறை விற்பனைத் தொகை 2023ஆம் ஆண்டை விட, 7.2விழுக்காடு அதிகரித்து கடந்த 12ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய இணைய சில்லறை விற்பனைச் சந்தையாக சீனா தொடர்ச்சியாக விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சீன வணிக அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் கூறுகையில், மின்னணு வணிகம் உள்நாட்டின் நுகர்வின் சீரான அதிகரிப்பை விரைவுபடுத்தி கூட்டு வெற்றியுடன் கூடிய பொருளாதார உலகமயமாக்கத்தின் வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது என்றார்.