‘கேரவனுக்குள் ரகசிய கேமரா’…ராதிகா சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை : மலையாள சினிமாவில் நடிக்கும்போது கேரவனுக்குள் ரகசிய கேமரா இருப்பது தெரியவந்ததாக, நடிகை ராதிகா அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முகேஷ், ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீது நடிகைகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், வெளிப்படையாக நடிகைகள் புகார் கொடுப்பது போல சில, நடிகைகள் தங்களுக்கு மலையாள திரைத்துறையில் நடந்த நடந்த கசப்பான அனுபவங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகை ராதிகா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு மலையாள படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட மோசமான சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

ஒரு முறை ஒரு மலையாள படத்தில் நடிக்கும்போது கேரவனுக்கு வெளியே ஆண்கள் கூட்டமாக அமர்ந்துகொண்டு சிரித்தார்களாம். நகைச்சுவையாக எதனையோ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது போல, முதலில் நடிகை ராதிகாவும் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றுவிட்டாராம். பிறகு, இதனைப்பற்றி, விசாரித்தபோது தான் ராதிகாவுக்கு பெரிய அதிர்ச்சியே ஏற்பட்டதாம்.

ஏனென்றால், அங்கிருந்தவர்கள் கேரவனுக்குள் ரகசியமாக யாருக்கும் தெரியாத கேமராவை வைத்து நடிகைகள் உடைகளை மாற்றும்போது அதனை போனில் கூட்டமாகப் பார்ப்பது தெரியவந்ததும். இந்த விஷயம் தெரிந்தவுடன் கடும்கோபமடைந்த ராதிகா கேரவனுக்கு செல்லாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று தனது உடைகளை மாற்றத் தொடங்கினாராம். தனக்குத் தெரிந்த இந்த விஷயத்தை சக நடிகைகளுக்குச் சொல்லி ராதிகா எச்சரிக்கவும் செய்துள்ளார்.

மேலும், மலையாள சினிமாவில் மட்டுமில்லை தமிழ், இந்தி ஆகிய திரைத்துறையிலும், பாலியல் தொல்லை இருக்கிறது எனவும், பட வாய்ப்புக்காக இதற்குச் சம்மதம் தெரிவிக்கவேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லாத ஒன்று, இது போன்ற தொல்லைக் கொடுப்பவர்களுக்குத் தண்டனை கிடைக்கவேண்டும்” எனவும் காட்டத்துடன் தெரிவித்தார்.

ஏற்கனவே, மலையாள சினிமாவை சுற்றிலும் ஒன்றன்பின் ஒன்றாகப் பல குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் நிலையில், கேரவனுக்குள் ரகசிய கேமராக்கள் வைத்திருப்பதாக ராதிகா குற்றம்சாட்டியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author