கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Estimated read time 0 min read

பிரபு சாலமனின் கும்கி – 2 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிரபு சாலமன் கும்கி – 2 படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார்.

இந்நிலையில் கும்கி – 2 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை சிம்பு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

You May Also Like

More From Author