10ஆம் நாள் நிறைவடைந்த 8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. இதில் எட்டப்பட்ட விருப்ப ஒப்பந்தங்களின் வர்த்தக மதிப்பு 8349கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 4.4விழுக்காடு அதிகரித்து வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது.
உலகளவில் இறக்குமதியைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரே ஒரு பொருட்காட்சி சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியாகும். உயர் நிலை திறப்பை சீனா முன்னேற்றுவதற்கான முக்கிய மேடையும் அதுவாகும்.
தற்சார்புத் திறப்பை ஆக்கப்பூர்வமாக விரிவாக்குவது உள்ளிட்ட முக்கிய பணிகள் அண்மையில் நடைபெற்ற 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சீனா தற்சார்பு திறப்பை விரிவாக்கும் முன்னணியில் இப்பொருட்காட்சி நிற்கிறது.
சீனாவின் திறப்பு ஒரு மாபெரும் சந்தையைக் கொண்டு வருதோடு, உலக முன்னணி படைப்புகளைத் திரட்டி அறிவியல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கத்தையும் முன்னேற்றியுள்ளது. அதுமட்டுமல்ல, சீனாவின் திறப்பு, உலகின் திறப்பையும் ஊக்குவித்து வருகின்றது.
