சீன ஹைனான் தாராள வர்த்தக மண்டலம் முழுமையும் சுதந்திரச் சுங்கச் செயல்பாடுகள் இவ்வாண்டின் டிசம்பர் 18ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாகத் துவங்கவுள்ளதாகச் சீன அரசு ஜூலை 23ஆம் நாள் அறிவித்துள்ளது. சீனா திறப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பான முக்கிய நடவடிக்கை இதுவாகும். இந்நடவடிக்கையானது சீனப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதோடு, உலகத்துக்கும் வாய்ப்புகளைக் கொண்டு வருமென சர்வதேச சமூகம் கருத்து தெரிவித்துள்ளது.
சுதந்திர சுங்க செயல்பாடுகள் இயங்கத் தொடங்கிய பிறகு, ஹைனான் தீவு சுங்கத் துறையின் கண்காணிப்பில் இருக்கும் சிறப்புப் பிரதேசமாக மாறுவதோடு, மேலும் தாராள வசதியான அமைப்பு முறையை நடைமுறைப்படுத்தும்.
மேலும் சலுகையுடைய காப்பு வரியில்லாத கொள்கை, மேலும் தளர்ந்த வர்த்தக நிர்வாக நடவடிக்கை, மேலும் வசதியான போக்குவரத்து, மேலும் உயர் செயல்திறன் கொண்ட கண்காணிப்பு மற்றும் நிர்வாக அமைப்பு முறை ஆகிய 4 முக்கிய துறைகள் வெளிக்காட்டப்படும்.
உலக முதலீட்டாளர்கள் ஹைனானில் முதலீடு செய்து தொழில் புரிவதற்குரிய அமைப்பு முறை ரீதியிலான வசதிகளை இவை அளிக்கும்.
சுதந்திர சுங்க செயல்பாடுகள் துவங்கவுள்ளதையடுத்து, ஹைனான் மேலதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளது. தரவின்படி, கடந்த 5ஆண்டுகளில், ஹைனான் தாராள வர்த்தக மண்டலம் நடைமுறைக்கு வந்த பிறகு அப்பகுதியின் உள்ளபடியே பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 10250கோடி யுவானை எட்டியுள்ளது. அவற்றில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகை 978கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 8098ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, சுதந்திர சுங்கச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆயத்தப் பணிகள் அடிப்படையில் தயாராக உள்ளன. மேலும் உயர் நிலையுடைய இப்புதிய வெளிநாட்டுத் திறப்பு மேடை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.