இனி ₹1500…. மகளிர் உரிமைத் தொகை உயர்வு…. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்….!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் தற்போது 1.3 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த ஆயிரம் ரூபாய் என்பது ஒரு தொடக்கம்தான்; பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்தத் தொகையும் உயரும்” என உறுதி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாத பட்ஜெட்டில், இந்தத் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கூடுதலாக 17 லட்சம் பெண்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தத் தொகை உயர்வு பெண்களுக்குப் பெரிய பொருளாதார உதவியாக இருக்கும் என்பதால், இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த ‘மெகா’ பிளான் எதிர்க்கட்சிகள் இடையேயும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author