2026ம் ஆண்டின் சீன வசந்த விழாவின் கலை நிகழ்ச்சிக்கான 4 கிளை அரங்குகள் பெயர் பட்டியல் டிசம்பர் 28ம் நாள் வெளியிடப்பட்டன. இதன் படி ஹெய் லூங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகர், ச்சே ஜியாங் மாநிலத்தின் யீவூ நகர், அன் ஹுய் மாநிலத்தின் ஹே ஃபேய் நகர், சிச்சுவான் மாநிலத்தின் யீபின் நகர் ஆகிய 4 இடங்களில் இந்தக் கலை நிகழ்ச்சியின் கிளை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 4 கிளை அரங்குகள், தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள தலைமை அரங்குடன் இணைந்து, செழுமையான பண்பாடு மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளன. நடனம், நாடகம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலம், 4 இடங்களின் தனிச்சிறப்புகளும் ஈர்ப்பாற்றலும் வெளிக்காட்டப்படும்.
படம்:VCG
