சீன சிறு மற்றும் நடுத்தர நிறுவனச் சங்கம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில், சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடு 89 ஆக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் 3ஆவது காலாண்டில் இருந்ததைக் காட்டிலும் இது 0.1 சதவீதப் புள்ளி அதிகரித்துள்ளது.
சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இயக்க நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்று இது காட்டுகிறது.
துறைவாரியாக எடுத்துக்கொண்டால், தொழில் துறை மற்றும் சமூகச் சேவைத் துறை குறியீடுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கட்டிட தொழில் துறை, சரக்குப் போக்குவரத்துத் துறை, மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிகத் துறைக்கான குறியீடுகளும் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றன.