மும்பையில் வரலாறு காணாத மழை: 100 ஆண்டு சாதனை முறியடிப்பு  

Estimated read time 1 min read

மும்பை மாநகரத்தில் கடந்த 8 மணி நேரத்தில் 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இது கடந்த 100 ஆண்டுகளில் பதிவான மழை அளவுகளை விட அதிகமாக இருப்பதால், இதுவரையிலான சாதனையை முறியடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் கடந்த மூன்று நாட்களாக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் இரவு, பகல் என இடைவிடாது பெய்யும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் வெள்ள பாதிப்பால் ரயில், விமான சேவைகளும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பிற்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பல்கலைக்கழகம் தனது தேர்வுகளை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு மாற்றியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author