கொலம்பிய அரசுத் தலைவர் பெட்ரோ அண்மையில் சீன-லத்தின் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் பொது சமூகக் கருத்தரங்கின் 4வது அமைச்சர் நிலை கூட்டத்தில் பங்கெடுத்து, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
சீனாவில் பல முறை பயணம் மேற்கொண்டிருந்த அவர் கூறுகையில், சீனாவின் நடைமுறை அனுபங்கள், மனித குலச் சமூக வளர்ச்சியின் புதிய முன்மாதிரியை வெளிக்காட்டியுள்ளது. தற்போதைய உலகின் அறிவியல் துறையின் முன்னணியில் சீனா இடம் வகிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு, எண்ணியல் பொருளாதாரம், தூய்மை எரியாற்றல் முதலியவற்றை சீனா ஒன்றிணைத்து வருகிறது. இவை, எதிர்கால உலகின் பொருளாதாரத்தின் மையமாகத் திகழும். சீனாவும் கொலம்பியாவும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, புரிந்துணர்வு குறிப்பாணை மூலம் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னேற்றி வருகின்றன.
இரு நாடுகள், பலதரப்புவாதத்தையும் பொது நலன்களையும் பேணிக்காக்க வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் சேர கொலம்பியா விரும்புகிறது.
இம்முன்மொழிவின் மைய கோட்பாடு என்பது, ஒன்றுக்கொன்று நலன் தந்து, கூட்டு வெற்றி பெறுவதாகும். இதன் மூலம் பல்வேறு நாடுகளுடன் சமமான நிலையில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.