திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த ‘துரந்தர்’ திரைப்படம் ஜனவரி 30 முதல் Netflix-ல்!  

Estimated read time 1 min read

கடந்த டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி, கடந்த ஏழு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் தடம் பதிக்க உள்ளது.
வட இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், வரும் ஜனவரி 30-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் இந்திய திரைத்துறையில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ரன்வீர் சிங்கின் திரைப்பயணத்திலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட டிஜிட்டல் ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.

You May Also Like

More From Author