தமிழ்நாடு பதிவுத்துறையில் முக்கிய முன்னேற்றமாக, சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், கிட்டத்தட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தொடர்புடைய நபரின் மொபைல் போனுக்கு SMS மூலமாக அனுப்பப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ‘ஸ்டார் 2.0’ (STAR 2.0) சாப்ட்வேர் செயலியில் இந்நவீனமைப்பு இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம், தற்போது பத்திர பதிவுகள் நடைபெற்ற நாளிலேயே, வில்லங்க சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும்.
தற்போது உள்ள நடைமுறைப்படி, பத்திர பதிவுக்குப் பின்னர் வில்லங்க சான்றிதழ்களை பெற சில நாள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
பத்திரப்பதிவில் புதிய மாற்றம்: ரெஜிஸ்ட்ரேஷன் முடித்த ஒரே நாளிலேயே EC-ஐ மொபைலிலேயே பெறலாம்
