ரிசர்வ் வங்கி (RBI) வரும் ஜூலை 1, 2026 முதல் வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. இந்த விதிகளின்படி, வங்கியின் கவனக்குறைவால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நேரடி இழப்புகளுக்கு 30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வங்கி குறைதீர்ப்பாளருக்கு (Ombudsman) முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வங்கியின் தவறான சேவையால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் நேர விரயத்திற்காக கூடுதலாக 3 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாகப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களின் புகார்களை விரைவாகவும் துல்லியமாகவும் சரிபார்க்க ‘மத்திய ரசீது மற்றும் செயலாக்க மையம்’ (CRPC) என்ற புதிய அமைப்பு நிறுவப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களின் புகார்களை நேரடியாக https://cms.rbi.org.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்த புதிய விதிமுறை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இனி வங்கிச் சேவையில் குறை இருந்தால் வாடிக்கையாளர்கள் துணிச்சலாகத் தட்டிக் கேட்கலாம்
