பள்ளி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் எதிர்பார்த்திருந்த தகவல் தற்போது உறுதியடைந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே மூன்று நாள்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க இருக்கிறது. இது, மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறந்த ஓய்வை வழங்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
முக்கியமாக, செப்டம்பர் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) மிலாது நபி பண்டிகையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாள் அரசு பொது விடுமுறையாகும். அதனை தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிறு (செப்.6, செப்.7) ஆகிய தினங்கள் இயல்பான விடுமுறை நாட்களாக இருப்பதால், மொத்தம் 3 நாள் நீண்ட விடுமுறை கிடைக்கின்றது. இதனைத் தொடர்ந்து, பிளான் போட்டுட்டு பயணம் செல்லத்தூண்டும் வகையில் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
