சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம்,சீனாவின் ரென் மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கடந்த 3 ஆண்டுகளாக உலகின் 46
நாடுகளைச் சேர்ந்த 47 ஆயிரம் மக்களிடம் கருத்து கணிப்பை மேற்கொண்டு வருகிறது.
2025ம் ஆண்டின் கருத்து கணிப்பில், சீனாவின் பொருளாதாரம் வலிமையாக உள்ளது என்று
89.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர். சீன பொருளாதாரம், உயர் வேகத்துடன் வளர்ச்சி
அடைந்து வருவதாக 89.3 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீன பொருளாதாரம், உலக
பொருளாதாரத்துக்கு ஆற்றிய பங்கை 86.4 விழுக்காட்டினர் பாராட்டினர். இதற்கிடையில்,
சீனா, ஒரு திறப்பு மற்றும் போட்டியாற்றல் மிகுந்த சந்தையாகும். இந்த சந்தை, தங்கள்
நாடுகளுக்கு முக்கிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. மேலும் சீனாவின் சீரான வணிகச்
சூழல், அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று பெரும்பாலோனர் கருத்து
தெரிவித்தனர்.
