ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசியபோது, தனது இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக புடின் தெரிவித்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.
புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “யார் இதைப் பற்றி என்னிடம் சொன்னார்கள் தெரியுமா? அதிபர் புடின் தான். அதிகாலையிலேயே அவர் என்னிடம் பேசினார். அவர் வீட்டு மீதே தாக்குதல் நடத்துவது முறையல்ல, இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
அதிபர் புடினின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து டிரம்ப் காட்டம்
