சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி  

Estimated read time 1 min read

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடரில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி, சனிக்கிழமை (நவம்பர் 29) நடைபெற்றப் போட்டியில் கனடாவை 14-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில், அனுபவ வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், களமிறங்கிய இளம் வீரர்கள் கோல் மழை பொழிந்து, பூல் பிரிவில் முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் போட்டியில் பெல்ஜியத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
ஆட்டத்தின் முதல் காலிறுதி நிமிடத்திலேயே நீலகண்ட சர்மா கோல் அடிக்க, ராஜீந்தர் சிங் 10வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்தார்.
கனடா தரப்பில் பிரெண்டன் குரலியுக் ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்.

You May Also Like

More From Author