வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்: ஒரு சகாப்தம் முடிவு  

Estimated read time 1 min read

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான ‘வங்கதேச தேசியக் கட்சியின்’ (BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை காலமானார்.
கடந்த நவம்பர் 23-ம் தேதி முதல் டாக்காவிலுள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
80 வயதான கலீதா, கல்லீரல் பாதிப்பு (Cirrhosis), மூட்டுவலி, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு நோய்களால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தார்.
கடந்த டிசம்பர் 11-ம் தேதி முதல் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author