ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2026 (FIFA World Cup 2026) தொடரின் குரூப் ஜி பிரிவின் தங்களின் தொடக்க லீக் போட்டியில் பங்கேற்பதற்காக, ஈரான் நாட்டின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வந்தடைந்தது.
உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகவும் அரசியல் ரீதியான பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வருகை அரங்கேறியுள்ளது.
ஈரான் அணி அமெரிக்க மண்ணில் கால் பதித்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வந்த ராணுவப் பதற்றங்களைத் தணிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது உலக அரங்கில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் பதற்றம்! உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த ஈரான் அணிக்கு எதிராக வெடித்த போராட்டம்
