புத்தாண்டை முன்னிட்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 2026 புத்தாண்டு உரை நிகழ்த்தினார். இந்த புத்தாண்டு உரை வெளிக்காட்டிய சீன நம்பிக்கையிலும் ஆற்றலிலும் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.
சீனாவின் உறுதியான வளர்ச்சி போக்கில் நம்பிக்கை பெற்றுள்ளது. மேலும் புதிய உயர் தர உற்பத்தி திறனை சீனா வளர்த்துள்ளதோடு, இடைவிடாமல் புதிய முன்னேற்றங்களை அடைந்தது. இது நீண்டகால வளர்ச்சிக்கு ஆற்றலை வழங்கியது. உலக அமைதியை முன்னேற்றியதிலும், உலக நிர்வாகத்தை மேம்படுத்தியதிலும் சீனா பெரும் பங்காற்றியுள்ளது. திறப்புப் பணியைப் பயன்படுத்தி ஒருதரப்புவாதத்தைச் சமாளிப்பதில் சீனா முக்கிய பொறுப்பு வகித்துள்ளது. ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தைச் சந்திக்கும் போது, உயர் நிலை திறப்புப் பணியை சீனா மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் சீன சர்வதேச சமூகத்திடம் நல்ல நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இது குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சரியான வரலாற்றில் ஊன்றி நின்று, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, உலக அமைதியையும் வளர்ச்சியையும் முன்னேற்றவும், மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தையும் முன்னெடுக்கவும் சீனா விரும்புகின்றது என்றார்.
