ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் மஹமூத் அலி யூசுப் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். 2025ஆம் ஆண்டில் பதவியேற்ற பிறகு ஊடகத்துக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தது இதுவே முதன்முறை.
ஆப்பிரிக்க-சீன உறவுகள் பற்றி அவர் கூறுகையில், ஆப்பிரிக்கா-சீனா இடையேயான உறவுகள், பொது நலன்கள், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு மற்றும் புரிதல் ஆகிய அடிப்படையில் உள்ளன. இது ஆப்பிரிக்காவுக்கு மிக முக்கியம் என்றார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2013ஆம் ஆண்டில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இதர முன்னெடுப்புகளை சீனா வழங்கியுள்ளது. இந்த முன்னெடுப்புகள் ஆப்பிரிக்க நாடுகளின் நலன்களுக்குப் பொருத்தமானவை. மேலும், கடந்த 26 ஆண்டுகளில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம் இருதரப்புகளுக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பு மேடையாக செயல்படுகிறது. ஆகவே ஆப்பிரிக்க நாடுகள் எப்போதும் இம்மன்றக் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு வருகின்றன. சீனாவின் உலகளாவிய முன்னெடுப்புகள் முழு உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என நம்புவதாக கூறினார்.
சீனாவுடன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரி விலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக கடந்த ஆண்டில் சீனா அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்த யூசுப், சீனா ஆப்பிரிக்க நாடுகளின் உண்மையான நண்பர் என்றும், இருதரப்பு நட்புறவை இது வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
ஒரே சீனா என்ற கொள்கை பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், ஒரே சீனா என்ற கொள்கையை ஆப்பிரிக்கா ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறது. சீனாவின் பிரதேச இறையாண்மை ஆப்பிரிக்க நாடுகளின் எல்லை போல் புதினமானதாகவும் அத்துமீற முடியாததாகவும் உள்ளது என கருதுவதாக அவர் கூறினார்.
சீன-ஆப்பிரிக்க உறவுகளின் எதிர்காலம் பற்றி மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கும் அவர், இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து, தொடர்ந்து உறவுகளை ஆழமாக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
