சீனாவின் உற்பத்தித் துறையைச் சேர்ந்த கொள்முதல் மேலாளர் குறியீடு ஆகஸ்டில் 49.1 சதவீத்த்தை எட்டியது. இது முந்தைய மாதத்தை விட 0.3 சதவீதம் குறைவு என்று 31ஆம் நாள் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயர் தொழில்நுட்பம் மற்றும் சாதனத் தயாரிப்பு ஆகிய உற்பத்தித் துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடுகள் முறையே 51.7 மற்றும் 51.2 விழுக்காடாகும். இது, முந்தைய மாதத்தை விட 2.3 மற்றும் 1.7 சதவீதம் அதிகம். அதேவேளையில், ஆற்றல் செலவு அதிகமுள்ள தொழிலின் கொள்முதல் மேலாளர் குறியீடு 2.2 சதவீதம் குறைந்துள்ளது. இது, ஆகஸ்டில் இந்த குறியீடு குறைந்ததன் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.