ஜுலை 26ம் நாள் தைவான் மக்களின் பிரதிநிதிகளிடம் நடைபெற்ற முதல் சுற்று வாக்களிப்பில் கோ மின் தாங் கட்சி வெற்றி பெற்றது. இது குறித்து, சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சேன் பின் ஹுவா 27ம் நாள் கூறுகையில்,
தைவான் சுதந்திரம், ஒரு கட்சி ஆதிக்கம் ஆகிய பேராசையின் காரணமாக, மின் ஜின் தாங் கட்சி வட்டாரம், தைவான் மக்களின் நலனைக் கவனிக்காமல், அரசியல் தகராறுகளைத் தொடர்ந்து தூண்டிவிட்டது. அரசியல் எதிரிகளை மட்டுப்படுத்திய செயல், “போலி ஜனநாயகமும், உண்மையான சர்வாதிகாரமும் கொண்ட போலித்தனத்தின் முகமூடியை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. மின் ஜின் தாங் கட்சியின் செயல்பாடுகள், தைவான் மக்களின் விருப்பத்தை மீறி, ஆதரவு பெறாது என்பதை இவ்வாக்கெடுப்பின் முடிவு காட்டியது.
படம்:VCG