சீன-நேபாள தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஆக்ஸ்ட் முதல் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நேபாள அரசுத் தலைவர் போடெல் ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், கடந்த சில ஆண்டுகளில் சீன-நேபாள உறவு, சுமுகமாகவும் சீராகவும் வளர்ந்து வருகிறது. அரசியல் நம்பிக்கை தொடர்ந்து வலுபட்டுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பின் ஒத்துழைப்பு விரிவாகி வருகிறது என்று தெரிவித்தார்.
சீன-நேபாள உறவின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். உங்களுடன் இணைந்து, இரு நாட்டுறவு நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, பாரம்பரிய நட்பை வெளிகொணர்ந்து, பல்வேறு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு தரப்புறவு, இரு நாட்டு மக்களுக்கு நன்மை தருவதை முன்னெடுத்து, பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்குப் பங்காற்ற பாடுபட விரும்புகிறேன் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.