ஜம்மு-காஷ்மீரின் செனாப் நதியில் ராட்லே நீர்மின் திட்ட பணிகளை மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரின் பஹலிகார், சலால், ஜீலம் நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து செனாப் நதி நீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை மத்திய மின்சார துறை அமைச்சர் மனோகர் லால் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கிஷ்த்வார் மாவட்டத்தில் அமையவுள்ள 850 மெகாவாட் ராட்லே நீர்மின் திட்டத்தை ஆய்வு செய்தார்.
செனாப் நதி நீர் நிறுத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மின் உற்பத்தியை அதிகரிக்கவும், எல்லையோர உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
