கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து தனது கலவையான கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர், AI தொழில்நுட்பம் எதிர்காலத்தில் புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு மருந்துகளைக் கண்டறிய உதவும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.
அதேசமயம், தத்ரூபமான மற்றும் உண்மையான நடிகர்களைப் போலவே தோன்றும் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்தான் இரவு நேரங்களில் தன்னைத் தூங்க விடாமல் கவலை கொள்ளச் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
