முடிவுக்கு வந்தது ‘அரசன்’ பட பிரச்சனை! சிம்புவும் தாணுவும் எடுத்த அதிரடி முடிவு  

Estimated read time 1 min read

நடிகர் சிலம்பரசன் (STR) நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நிலவி வந்த சிக்கல்கள், தற்போது சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் படக்குழுவினருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, விரைவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.
‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்குப் பிறகு அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஐசரி கணேஷிடம் சிலம்பரசன் முன்பணம் பெற்றிருந்தார்.
இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலையீட்டில் ‘அரசன்’ படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது.
இது குறித்து சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர் வெளியிட்ட ஆடியோவில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author