திமுக-விடம் மல்லுக்கட்டும் காங்கிரஸ்.. அறிவாலயம் எடுக்கும் முடிவு என்ன? 

Estimated read time 1 min read

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு, கடந்த முறையை விடக் கூடுதலாக 35 தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்களைக் கேட்டு பிடிவாதம் காட்டி வருகிறது. ஆனால், திமுக தரப்பிலோ கடந்த தேர்தலைப் போல 25 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் மட்டுமே வழங்க முடியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையை காங்கிரஸ் கைவிட்ட போதிலும், தொகுதிகளின் எண்ணிக்கையில் கிரிஷ் சோடங்கர் காட்டும் பிடிவாதமே இழுபறிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நிலவும் மோதல்களைத் தவிர்த்து திமுக-வுடன் சுமுகமாகப் போகுமாறு சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளதால், விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொருபுறம், திமுக தனது மற்ற கூட்டணிக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் மறைவு காரணமாகத் துக்கம் அனுசரிப்பதால் இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்காது எனத் தெரிகிறது.

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) வரும் மார்ச் 2-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. ராகுல் காந்தியின் சென்னை வருகைக்கு முன்னதாகவே கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை ஒரு முடிவுக்குக் கொண்டு வர திமுக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author