பல்வேறு பொருட்காட்சிகளை வெற்றிகரமாக நடத்திய சீனா

 

140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி துவங்கவுள்ளது. 9வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5ஆம் நாள் துவங்கும். மேலும், அண்மையில், சேவை வர்த்தகத்திற்கான சீன சர்வதேசப் பொருட்காட்சி, சீன-ஆசியான் பொருட்காட்சி, உலகளாவிய எண்ணியல் வர்த்தகப் பொருட்காட்சி முதலியவற்றை சீனா வெற்றிகரமாக நடத்தியது.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநிங் அம்மையார் அக்டோபர் 14ஆம் நாள் கூறுகையில், சீனா, உலகத்துடன் ஒன்றிணைந்து, வளர்ச்சிக்கு இயக்காற்றலை ஊட்டி, மக்களின் வாழ்வாதாரத்துக்கு நன்மை புரிவதற்கான முக்கிய ஜன்னல்களாக, இந்தப் பொருட்காட்சிகள் திகழ்கின்றன என்றார். மேலும், இவ்வாண்டு, சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி நடத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். 32 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளன. தவிரவும், நடப்பு சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில், வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு இலவசமாக காட்சியரங்குகளைத் தொடர்ந்து வழங்கப்படும். அத்துடன், ஆசிய மற்றும் ஆப்பிரிக்கப் பொருட்களின் சிறப்புப் பகுதி மேம்படுத்தப்படுவதன் மூலம், சீனாவுடன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் சுங்கவரி இல்லாத சலுகையைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கும் என்றும் மௌநிங் தெரிவித்தார்.

உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை முன்னேற்றுவதிலும், உலகத்துக்கு வளர்ச்சி வாய்ப்புகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதிலும் சீனா ஊன்றி நிற்கும் மனவுறுதி மற்றும் முயற்சிகளை இந்தப் பொருட்காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author