சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் நிரந்தரக் குழுவின் 15ஆவது கூட்டம் மார்ச் முதல் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்யப்பட்ட முடிவின்படி, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் 2026ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்க உள்ளது. மேலும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் நிரந்தரக் குழுவின் பணியறிக்கையையும், 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடருக்குப் பிறகு முன்மொழிவு பணி தொடர்பான அறிக்கையையும் கேட்டறிந்து பரிசீலனை செய்வது, 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, அரசு பணியறிக்கையையும் தொடர்புடைய இதர அறிக்கைகளையும் கேட்டறிந்து விவாதம் நடத்துவது, தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்ட வரைவு பற்றி விவாதம் நடத்துவது ஆகியவை 4ஆவது கூட்டத்தொடரின் முக்கியமான நிகழ்ச்சி நிரல் என முன்மொழியப்பட்டது.

You May Also Like

More From Author