2030ஆம் ஆண்டு ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், உலகளாவிய வளர்ச்சி தொடர்பான மதிப்பீடு செய்யக்கூடிய 139 குறியீடுகளில் 36 சதவீதம் மட்டுமே சீராக முன்னேறியுள்ளது. மேலும், 230 கோடி மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதோடு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையிலான செல்வ இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகளவில் இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில், 2021ஆம் ஆண்டில் ஐ.நா பொது பேரவையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவு என்ற தீர்வை முன்வைத்தார். இது, வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது, மக்களை மையமாகக் கொண்ட கொள்கை, அனைவருக்கும் நன்மை தரும் தன்மை, புத்தாக்கம் சார்ந்த வளர்ச்சி, மனிதர்-இயற்கை இணக்கமான சகவாழ்வு, செயல் சார்ந்த வளர்ச்சி ஆகிய ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீன ஞானம் மற்றும் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த முன்மொழிவு, உலகளாவிய வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய ஊக்குவித்துள்ளது.
இதுவரை 130க்கும் மேற்பட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இம்முன்மொழிவை ஆதரித்து இதில் பங்கேற்றுள்ளதோடு, உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவின் நண்பர்கள் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 88 நாடுகளாக விரிவடைந்துள்ளது. இம்முன்மொழிவின் நடைமுறை மதிப்பை இது நிரூபித்துள்ளது. சீனா-ஐ.நா. அமைதி மற்றும் வளர்ச்சி நிதியம் உள்ளிட்ட தளங்களின் வழிகாட்டலின் கீழ், இம்முன்மொழிவு 2300 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளது. இதுவரை 1800க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதுடன், இம்முன்மொழிவு 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பயனளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
