ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை (IB) மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (LoC) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பா, ரஜௌரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் இந்த ட்ரோன் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, எல்லை தாண்டி இந்திய வான்பரப்பிற்குள் நுழைந்த இந்த ட்ரோன்கள், முக்கியமான ராணுவ நிலைகளுக்கு மேல் பறந்துவிட்டு மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றன.
ரஜௌரி மாவட்டத்தின் நௌஷெரா செக்டாரில், மாலை 6:35 மணியளவில் கானியா-கல்சியன் கிராமத்தின் மேல் பறந்த ட்ரோனை நோக்கி இந்திய ராணுவத்தினர் மெஷின் துப்பாக்கிகளால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் நடமாட்டம்;பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை
