இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் லேப்டாப் மற்றும் டேப்லெட்களில் பாடங்களை டைப் செய்வதையே விரும்புகின்றனர்.
ஆனால், தட்டச்சு செய்வதை விடக் கையால் எழுதுவது மூளையின் கற்றல் திறன் மற்றும் ஞாபக சக்தியைப் பெருமளவு அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது பழைய கால முறை என்று தோன்றினாலும், நரம்பியல் ரீதியாக இது மூளைக்குச் செய்யும் நன்மைகள் ஏராளம். கையால் எழுதும்போது மூளை தகவல்களை ஆழமாகப் பதிவு செய்கிறது.
நாம் டைப் செய்யும்போது வேகமாகக் குறிப்புகளை எடுக்கிறோம், ஆனால் மூளை அந்தத் தகவலைச் செயலாக்க நேரம் எடுப்பதில்லை.
மாறாக, கையால் எழுதும்போது வேகம் குறைகிறது. இதனால் மூளை அந்தத் தகவலைச் சிந்தித்து, முக்கியமானது எது என்பதைத் தீர்மானித்து எழுத வேண்டியுள்ளது.
லேப்டாப்பில் படிப்பதைவிட எழுதிப் படிப்பது தான் மூளைக்கு நல்லது
