சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் டிசம்பர் 26ஆம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதில் கலந்து கொண்டு பேசிய இந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் சியாவோ கோ கூறுகையில் அண்மையில், சீன மற்றும் இந்திய அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய பொதுக் கருத்துக்களின் படி, தூதாண்மை மற்றும் இராணுவ வட்டாரத்தின் மூலம் சீன-இந்திய எல்லை நிலைமை குறித்து இரு நாடுகள் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, முக்கியமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன என்றார்.
தற்போது எல்லை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இரு நாடுகள் எட்டிய தீர்வுத் திட்டத்தை இரு படைகளும் முழுமையாகவும் பயனுள்ள முறைகளிலும் செயல்படுத்தி வருகின்றன. இதன் முன்னேற்றமும் பயனும் நன்றாக உள்ளன.
இந்தியாவுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய பொதுக் கருத்துகளை உணர்வுபூர்வமாகச் செயல்படுத்தி, மேலதிக பரிமாற்றத்தையும் தொடர்பையும் முன்னேற்றி, இரு படைகளின் உறவு வளர்ச்சியை மேம்படுத்தி, எல்லைப் பிரதேசத்தின் தொடரவல்ல அமைதியையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
