அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் தன்னை “வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” (Acting President of Venezuela) என்று குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இது தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் குறித்த புதிய விவாதங்களை உலக அரங்கில் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா சமீபத்தில் வெனிசுலாவில் நடத்திய ஒரு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் பிடிபட்டனர்.
போதைப்பொருள் பயங்கரவாத சதி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் தற்போது நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
டிரம்பின் சமூக வலைதள பதிவால் உலக நாடுகள் அதிர்ச்சி
