சீனப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு வரை, சீனாவின் முக்கிய நகரங்களில் முதியோர்களின் வசதிக்காக 1450 பேருந்து வழித்தடங்கள் இயக்கப்பட்டன.
தனிப்பயனாக்கப்பட்ட பேருந்து வழித்தடங்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும், நகர்ப்புற ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேற்ற வழிகளுக்கு அருகிலேயே 50 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் விகிதம் 75 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது. நாடளவில் தனிப்பயனாக்கப்பட்ட பயணியர்ப் போக்குவரத்து வழித்தடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 700க்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
