சீனா இவ்வாண்டில் கிராமப்புற மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் பயனுள்ளதாகவும் நடைமுறைப்படுத்தவுள்ளது. முக்கியமாக வேளாண்மையின் பன்னோக்க உற்பத்தித் திறன் மற்றும் தரம் ஆகியவற்றின் பயனை உயர்த்தித் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளின் விளைச்சல் அதிகரிப்பைச் சீனா முன்னேற்றவுள்ளது. மேலும், உயர் தர வயல்களின் கட்டுமானத்தை வளர்ப்பதோடு, வேளாண்மைத் துறையில் பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புத் திறனின் மேம்பாட்டையும் விரைவுபடுத்தி வேளாண்மைக்கான உபகரணங்களின் நவீனமயமாக்கல் நடவடிக்கையையும் நடைமுறைப்படுத்தவுள்ளது.
உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தானியங்கள் மற்றும் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்களின் நிலையான உற்பத்தியையும் விநியோகத்தையும் முழு மூச்சுடன் உறுதிப்படுத்துவதாகச் சீன வேளாண்மை மற்றும் கிராமப்புற அமைச்சகத்தின் வளர்ச்சித் திட்டமிடல் பிரிவுத் தலைவர் ஜென்பாங்சிவேன் தெரிவித்தார்.
