தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சித்திரைத் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு விருதுகளின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டிற்கான (2026) விருதுப் பட்டியலைத் தமிழக அரசு இன்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ளது.
இதில், திமுக பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு உயரிய ‘அண்ணா விருது’ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திராவிடர் கழகப் பிரச்சாரக் குழுச் செயலாளர் அருள்மொழிக்கு ‘பெரியார் விருதும்’, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கும் ‘அம்பேத்கர் விருதும்’ அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், எஸ்.எம். இதயத்துல்லாவுக்கு ‘காமராஜர் விருது’ மற்றும் கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு ‘மகாகவி பாரதியார் விருது’ வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் முன்னிலையில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
