பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தென் மாவட்டங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பண்டிகை முடிந்து ஜனவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊர் திரும்புவோரின் கூட்டம் அலைமோதும் என்பதால், அன்றைய தினம் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ஒரு சிறப்பு ரயில் (Special Train) இயக்கப்பட உள்ளது.
இந்தச் சிறப்பு ரயில் ஜனவரி 18-ம் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை தாம்பரத்தை வந்தடையும். இதற்கான முன்பதிவு (Booking) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் தவித்த பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியைத் தந்துள்ள நிலையில், இந்த வாய்ப்பைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
