சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், லாவோஸ் மக்கள் புரட்சி கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான தொங்லூங் ஆகியோர் இருநாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவு குறித்து ஏப்ரல் 25ஆம் நாள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.
சீனாவும் லாவோஸும் பொது எதிர்காலம் பகிரப்பட்ட சமூகத்தில் சோஷலிச அண்டை நாடுகளாகும். இரு கட்சிகள் மற்றும் இருநாடுகளின் முந்தைய தலைமுறை தலைவர்களால் உருவாக்கப்பட்ட நட்புறவு காலப்போக்கில் வலுவடைந்து வருகிறது என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். தற்போது மேலும் உயர் வரையறை, உயர்தரம் மற்றும் உயர்நிலையில் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை இருதரப்பும் விரைவுபடுத்தி, பல்வேறு நிலையில் நெருக்கமான தொடர்புகளையும் பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பையும் மேற்கொண்டு வருகின்றன என்றும், சீனாவும் லாவோஸும், தங்கள் மைய நலன்கள் மற்றும் பொது அக்கறை உள்ள பெரிய விவகாரங்களில் ஒன்றுக்கு ஒன்று உறுதியாக ஆதரவளித்து, பிரதேசம் மற்றும் உலகிற்கு மதிப்புமிக்க நிலைத்தன்மையை வழங்கி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சீனா-லாவோஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, உத்திப்பூர்வ பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பது, பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்வது, பல்வேறு துறைகளிலான நடைமுறை ஒத்துழைப்புகள் அதிக சாதனைகளைப் பெறச் செய்வது, இருநாட்டு மக்களுக்கு மேலும் நன்மைகளை வழங்குவது ஆகியவற்றுக்கு தொங்லூன்னுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன அரசு மற்றும் மக்கள் நீண்டகாலமாக வழங்கி வரும் மதிப்புமிக்க ஆதரவு மற்றும் உதவிக்கு தொங்லூன் நன்றி தெரிவித்ததோடு, ஒரே சீனா என்ற கொள்கையை எப்போதும் கடைப்பிடிக்கும் லாவோஸ், சீனா தனது மைய நலன்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.
அதேநாள் சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங் லாவோஸ் தலைமை அமைச்சர் சோனெக்ஸே ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.
