சீன மக்கள் விடுதலைப் படையின் நான்கு பிரிவுகளான விண்வெளிப் படை, இணையவெளிப் படை, தகவல் ஆதரவுப் படை மற்றும் கூட்டு தளவாட ஆதரவுப் படை ஆகியவற்றுக்கான கொடி வடிவங்களை வெளியிடுவதற்கான உத்தரவில் சீன மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் கையெழுத்திட்டார்.
மேலும், சீன இராணுவத் தினத்தை முன்னிட்டு, சீன மக்கள் விடுதலைப் படை மற்றும் ஆயுதக்காவற்துறையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள், இராணுவத்திலுள்ள பொதுப் பணியாளர்கள், ரிசர்வ் படைகள் மற்றும் குடிமக்கள் படைகளின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.