பெய்ஜிங்கில் ஏப்ரல் 3ஆம் நாள் முற்பகல் தன்னார்வ மரம் நடுதல் நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் பங்கெடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், மரம் நடுதல் காடு வளர்ப்பானது, உயிரின நாகரிக கட்டுமானத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். பல்வேறு இடங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள், பரந்துபட்ட மக்களும் ஊழியர்களும் காடு வளர்ப்பு நிகழ்ச்சியில் பங்கெடுப்பதை ஊக்குவித்து, பசுமை வளர்ச்சிக் கருத்தைச் செயல்படுத்தி, உயிரின பண்பாட்டைப் பரவல் செய்து, நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் உயிரிப்பு ஆற்றலை ஊட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.