ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, புகழ்பெற்ற இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் திருவள்ளூர் ஆயர்கண்டிகையில் உள்ள அவரது ஸ்டுடியோவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகனை சந்தித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு, சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில், அவர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஏஆர் ரஹ்மான், தற்போது பல படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறது. தக் லைஃப் படத்திற்கான அவரது சமீபத்திய திரைப்பட ஆல்பம் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது சின்மயி பாடிய முத்த மழை பாடல் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
மத்திய அமைச்சர் எல்.முருகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சந்திப்பு
