கூவம் ஆற்றில் எடுக்க எடுக்க கிடைத்த முருகர், ஐயப்பன், அம்மன் சிலைகள்- அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

Estimated read time 0 min read

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் புதைந்திருந்த 50 கற்சிலைகளை கிராமமக்கள் கண்டெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள கூவம் ஆறு வழியாக அதே கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் இன்று காலை நடந்து சென்றுள்ளனர். அப்போது, ஆற்றில் மணலில் புதைந்திருந்த சாமி கற்சிலை ஒன்று அவன் கண்ணில் தென்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அப்பகுதி இளைஞர்களிடம் தெரிவித்ததால் கிராம மக்கள் திரண்டு கற்சிலையை ஆற்றில் இருந்து எடுத்துள்ளனர்.

தொடர்ந்து அருகில் ஆற்று மணலை தோண்டியபோது மேலும் கற்சிலைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இதில் விநாயகர், முருகர், ஐயப்பன், அம்மன், சர்ப்பம் நவகிரக சிலைகள் சிலைகள் என 50 சிலைகளை தோண்டி எடுத்துள்ளனர். அந்த சிலைகள் மிகவும் பழமை வாய்ந்த சிலைகள் என்பதால் அரசிடம் ஒப்படைக்க அப்பகுதியை சேர்ந்த சிலர் வலியுறுத்தினர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த‌ கடம்பத்தூர் போலீசார் சிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் சிலைகளை மீட்டு ஆய்வு செய்வதற்காக கொண்டு சென்றனர்.

கூவம் ஆற்றில் தோண்டத் தோண்ட 50 சாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது,

Please follow and like us:

You May Also Like

More From Author