சீன ஊடக குழுமத்தின் 2026 வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான முதலாவது ஒத்திகை ஜனவரி 17ஆம் நாள் தடையின்றி நிறைவேற்றப்பட்டது. பல்வகை நிகழ்ச்சிகளில், புத்தாக்க தொழில்நுட்பங்களின் பயன்பாடு, அரங்கு மற்றும் காட்சி வடிவமைப்பு ஆகியவை சிறந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
குதிரை ஆண்டிற்கான வசந்த விழா கலை நிகழ்ச்சி, சந்தோஷம், மங்கலம் மற்றும் மனமகிழ்ச்சி தரும் அடிப்படை சூழ்நிலையில், கலாசாரத்தை அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைத்து, புதிய யுகத்தில் சீனா உயிர்த்துடிப்புடன் முன்னேறி வரும் தோற்றத்தை வெளிப்படுத்தும்.
சீனத் தேசத்தின் தலைசிறந்த பாரம்பரிய கலாசாரத்திலிருந்து சீன ஊடகக் குழுமம் ஞானம் மற்றும் சக்திகளைப் பெற்று, கலை நிகழ்ச்சியின் படைப்பில், குதிரை தொடர்பான கூறுகளை நேர்த்தியாக சேர்த்து, சிந்தனை, கலை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இணையும் ஒருங்கிணைந்த முறையுடன், கலைநய வெளிப்பாட்டின் எல்லையை விரிவாக்கி வருகிறது.
