சீனத் துணை அரசுத் தலைவர் ஹாங்சேங் 14ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில்,இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் சந்திப்பு நடத்தினார்.
கடந்த ஆண்டின் அக்டோபர் திங்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்திய தலைமையமைச்சர் மோடியுடன் ரஷியாவில் வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை நடத்தி, சீன-இந்திய உறவின் புதிய துவக்கத்தைத் தொடங்கினார்.
சீனாவும் இந்தியாவும் பெரிய வளரும் நாடுகளாகும். தெற்குலகத்தின் முக்கிய உறுப்பு நாடுகளாகும். ஒன்றுக்கு ஒன்று கூட்டாளிகளாக இரு நாடுகள் ஒத்துழைப்பது, இரு தரப்புகளின் சரியான தேர்வாகும்.
இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை மேலும் நடைமுறைப்படுத்தி, அவர்களின் வழிகாட்டலில், பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, அந்தந்த நாட்டின் கவனத்துக்கு மதிப்பளித்து, இரு தரப்புறவின் தொடர்ச்சியான, சரியான, சீரான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று ஹாங்சேங் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு, இரு தரப்புறவு நிதானமாக மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் எட்டியுள்ள ஒத்த கருத்துகள் என்ற அடிப்படையில், இரு தரப்புறவின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்தி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை முன்னேற்றி, பல தரப்பு அமைப்புமுறையில் தொடர்பையும் வலுப்படுத்த வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பு தலைமை நாடான சீனா, இவ்வாண்டின் இவ்வமைப்பின் உச்சிமாநாட்டை நன்றாக நடத்துவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று ஜெய் சங்கர் தெரிவித்தார்.