சீனாவில் உள்ள அமெரிக்க வணிக சங்கம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சீனச் சந்தையின் வளர்ச்சி குறித்து நம்பிக்கை கொண்டு இருக்கும் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் விகிதம் பெருமளவில் அதிகரித்துள்ளது.
சீனாவின் பரந்த சந்தை உலகிற்கு பெரிய வாய்ப்பு ஆகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சீனா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு ஒன்றுக்கு ஒன்று நன்மை பயக்கும் என்பதை சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் நிரூபித்துள்ளன என்றார்.
இவ்வாண்டு 15வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்க ஆண்டாகும். சீனா உலகப் பொருளாதாரத்திற்கு நிலைத்தன்மை, வளர்ச்சி வாய்ப்புகள், புத்தாக்க ஆற்றல் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்தார்.
