மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகாரப்பணிக் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது

சீன மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகாரப் பணிக் கூட்டம் ஜனவரி 18, 19 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணையத்தின் செயலாளருமான சென் வென்சிங் இக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அரசியல் மற்றும் சட்ட விவகார வாரியங்கள், புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, ஷிச்சின்பிங்கின் சட்ட ஆட்சி சிந்தனை மற்றும் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்தை செயல்படுத்தி, கட்சியின் முழுமையான தலைமை, மக்களே முதன்மை, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நிலைத்து நின்று, உயர் நிலையில் பாதுகாப்பான சீனாவையும் சட்டப்படி ஆட்சிபுரியும் சீனாவையும் முயற்சியுடன் கட்டமைத்து, 15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தின் சிறந்த தொடக்கத்துக்கு வலுவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டில் தேசிய அரசியல் மற்றும் சட்ட விவகாரப் பணிகளின் சாதனைகளை உறுதிப்படுத்தியதோடு, 2026ஆம் ஆண்டின் பணிகளை செவ்வனே செய்வதற்காக, அரசியல் துறையின் கட்டுமானம், தேசிய பாதுகாப்பு பணிகள், பணிக் குழு உருவாக்கம் உள்ளிட்டவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும் சென் வென்சிங் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author