சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா நேவால் அறிவிப்பு  

Estimated read time 1 min read

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சர்வதேச மற்றும் போட்டி பேட்மிண்டன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்த 35 வயதான சாய்னா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது முழங்காலில் உள்ள குருத்தெலும்பு (Cartilage) முற்றிலும் தேய்ந்துவிட்டதாகவும், மூட்டுவலி (Arthritis) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“எனது உடல் இனி ஒரு எலைட் வீராங்கனைக்குரிய கடுமையான பயிற்சிகளை தாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. என்னால் முன்னரைப் போல ஓடி விளையாட முடியாததால், விடைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று உணர்கிறேன்,” என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author