சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு! 27 ஆண்டுகால சாதனைப் பயணம் நிறைவு..!

Estimated read time 1 min read

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் (NASA) நட்சத்திர வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், கடந்த டிசம்பர் 27, 2025 முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதாக நாசா இன்று (ஜனவரி 21, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸின் இறுதிப் பயணம் மிகவும் சவாலானதாக அமைந்தது. 2024 ஜூன் மாதம் ‘போயிங் ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் 10 நாள் பயணமாகச் சென்ற அவர், விண்கலக் கோளாறு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டார். இறுதியில் 2025 மார்ச் மாதம் ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX Crew-9) விண்கலம் மூலம் பாதுகாப்பாக பூமி திரும்பினார். இந்த நீண்ட காத்திருப்பே அவரது கடைசி சாதனையாக 286 நாட்கள் ஒரே பயணத்தில் நீடித்தது.

சுனிதா வில்லியம்ஸின் வியக்க வைக்கும் சாதனைகள்:

  • விண்வெளிப் பயணம்: 1998-ல் நாசாவில் சேர்ந்த இவர், மொத்தம் 3 முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் செய்துள்ளார்.
  • 608 நாட்கள்: தனது மூன்று பயணங்களிலும் சேர்த்து மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் தங்கி, அதிக காலம் விண்வெளியில் இருந்த இரண்டாவது நாசா வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • விண்வெளி நடை (Spacewalk): ஒன்பது முறை விண்வெளியில் நடந்து (Spacewalk), மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் செலவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
  • விண்வெளி மாரத்தான்: விண்வெளியில் இருந்தபடியே பூமியில் நடந்த மாரத்தான் போட்டியில் (Treadmill மூலம்) பங்கேற்ற முதல் நபர் இவரே.
Please follow and like us:

You May Also Like

More From Author